கோயம்புத்தூர் மாவட்டம், செட்டிவீதி கேசி தோட்டம் பகுதியில் வனஜா (70) என்பவருக்குச் சொந்தமான மாடி வீடு உள்ளது. செப்.6ஆம் தேதி மாலை பெய்த மழையால் இந்த வீடு இடிந்து விழுந்தது.
இந்த கட்ட இடிபாடுகளுக்குள் சிக்கிய 8 பேரில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இன்று காலை மீட்கப்பட்ட மணிகண்டன் (40) கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.