தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்! - Coimbatore bank employees strike

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் வங்கி ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Coimbatore bank employees
Coimbatore bank employees strike

By

Published : Jan 31, 2020, 8:11 PM IST

கோவையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோவை ரயில் நிலையம் முன்பாக பாங்க் ஆப் பரோடா முன்பு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டம் ரத்து செய்யவேண்டும், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் விடுமுறை வழங்க வேண்டும், அதிகாரிகளுக்கு வேலை நேரம் நிர்ணயம் செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

அகில இந்திய வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் சம்மேளனத்தின் கோவை மாவட்ட தலைவர் மீனாட்சி சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் சம்மேளனத்தின் கோவை மாவட்ட தலைவர் மீனாட்சி சுப்பிரமணியம் பேட்டி

ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் ”வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நாளொன்றுக்கு 400 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது, தங்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் ஏற்கனவே அறிவித்தபடி மார்ச் மாதத்தில் அடுத்த கட்டமாக வேலை நிறுத்தமும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்” என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் முன்னாள் நீதிபதிகள் பேரணி: தலைமை நீதிபதி வேதனை

ABOUT THE AUTHOR

...view details