தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை மற்றும் திருப்பூர் பல நகரங்களுக்கு முன்மாதிரியாக உள்ளன... கர்நாடக முதலமைச்சர் - பசவராஜ் பொம்மை

கோவையில் ஓர் விழாவில் கலந்துகொண்ட கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “கோவை மற்றும் திருப்பூர் பல நகரங்களுக்கு முன்மாதிரியாக உள்ளன” எனப் பேசியுள்ளார்.

’வருமான வரி நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானது..!’ - கர்நாடகா முதலமைச்சர்
’வருமான வரி நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானது..!’ - கர்நாடகா முதலமைச்சர்

By

Published : Aug 18, 2022, 7:00 PM IST

Updated : Aug 18, 2022, 7:41 PM IST

கோவையில் பிரபலமான சுகுணா குழுமத்தின் நிறுவனர் ஜி.ராமசாமி நாயுடுவின் நூற்றாண்டு விழா காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுகுணா குழுமத்தின் நிறுவனர் ராமசாமியின் உருவச்சிலையினை திறந்து வைத்தார்.

பின்னர் விழாவில் சிறப்புரை ஆற்றிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, இளமைக்காலத்தில் கோவையில் பணிசெய்த நிகழ்வுகள் குறித்து பகிர்ந்துகொண்டார்.

மேடையில் பேசிய அவர், ''G. ராமசாமி நாயுடு எனது ’காட் ஃபாதர்’. சுகுணா குழுமத்தலைவரின் நூற்றாண்டு காலத்தில் மீண்டும் ஒரு முறை தமிழ்நாடு வருவேன்’ எனத் தெரிவித்தார்.

”வருமான வரி நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானது. தொழில் முனையத்தொடங்கிய போது எனது தந்தையின் பெயரை பயன்படுத்திக்கொள்ளக்கூடாது என அறிவுரை வழங்கியவர் ஜி. ராமசாமி நாயுடு.

21ஆம் நூற்றாண்டு அறிவு சார் சகாப்தமாக உள்ளது. கோவை மற்றும் திருப்பூர் பல நகரங்களுக்கு முன்மாதிரியாக உள்ளன' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Viral Audio... கிருஷ்ண ஜெயந்திக்கு குழந்தைகளை வேடமணிந்து வரக்கூறிய ஆசிரியர்கள்.. திராவிடர் கழகம் எதிர்ப்பு

Last Updated : Aug 18, 2022, 7:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details