தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடரும் கனமழை.. 5 மாவட்டங்களில் இன்று(நவ.9) பள்ளிகளுக்கு விடுமுறை! - நீலகிரி பள்ளி விடுமுறை

Tamil Nadu rains School leaves: தொடர்மழை காரணமாக மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று (நவ.9) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 6:37 AM IST

Updated : Nov 9, 2023, 8:14 AM IST

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக இன்று (நவ.9) கோவை, நெல்லை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, தருமபுரி, நாமக்கல், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 34 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு தொடர் கனமழை பெய்து வருகிறது.

5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை: தொடர்மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை (School Holiday) அறிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் உதகை, குன்னூர், குந்தா மற்றும் கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமைச்சர் உதயநிதி சனாதனம் பற்றி புரிந்து கொள்ள செய்த ஆராய்ச்சி என்ன? - உயர்நீதிமன்றம் கேள்வி

Last Updated : Nov 9, 2023, 8:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details