தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் மரக்கிளை விழுந்து விபத்து; மனைவி உயிரிழப்பு, கணவனுக்கு சிகிச்சை! - கோவையில் விபத்து

கோவை: சாலையில் விழுந்த மரக்கிளையில் சிக்கி கணவன் மனைவி படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மனைவி உயிரிழந்துள்ளார்.

விபத்து
விபத்து

By

Published : May 22, 2020, 2:26 AM IST

கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் அருகே உள்ள ரங்கம்மாள் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ராஜா. தனியார் நிறுவன ஊழியராகப் பணியாற்றும் இவரது மனைவி காயத்திரி. இந்தத் தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.

தம்பதியர் இன்று மதியம் இருசக்கர வாகனத்தில் மகள்கள் படிக்கும் பள்ளிக்கு அடுத்த கல்வியாண்டுக்கான புத்தகங்கள் வாங்கச் சென்றனர். ராஜா வாகனத்தை ஓட்டியுள்ளார். காயத்திரி பின்னால் அமர்ந்து இருந்தார். லட்சுமி மில் சந்திப்பில் இருந்து புலியகுளம் சாலையில் செல்லும் போது, அங்குள்ள ஓட்டல் அருகே இருந்த மரத்தின் கிளை சுமார் 15 அடி உயரத்தில் இருந்து முறிந்து தம்பதியர் மீது விழுந்தது.

இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதில் காயத்திரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details