கோவை: பச்சாபாளையம் ஆர்.எஸ்.புரம் லாலி ரோட்டில் ஆவின் மார்க்கெட்டிங் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சங்கீதா என்பவர் 2018ஆம் ஆண்டு விற்பனை மேலாளராக பணியில் சேர்ந்தார்.
இவர் விற்பனை பொருள்களுக்கான பணத்தை கணக்கில் காட்டாமல் முறைகேட்டில் ஈடுபட்டுவருவதாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் சென்னையில் இருந்து வந்த 4 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள், ஆவின் நிறுவனத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.