கோயம்புத்தூரில் 1998ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 168 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகளான பாஷா, அன்சாரி உள்பட பலருக்கும் ஆயுள் தண்டனை, 10 ஆண்டு தண்டனையும் விதிக்கப்பட்டது.
சிபிசிஐடி காவல்துறையினர் திடீர் அறிவிப்பு இதில், பலர் சிறைத்தண்டனை பெற்று விடுதலை அடைந்துள்ளனர். இன்னும் 16 பேர் சிறைத்தண்டனை பெற்று அனுபவித்து வருகிறார்கள். மேலும், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வரும் நிலையில், கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த வளர்ந்தராஜா, முஜிபுர் ரகுமான் ஆகியோர் இதுவரை கைதாகவில்லை. இதனால், சிபிசிஐடி காவல்துறை தலைமறைவாக உள்ளவர்களின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் மக்கள் அதிகமாகக் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் குற்றவாளிகளின் புகைப்படம் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், மதுரையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளான அபுபக்கர் சித்திக் மற்றும் அயூப் என்கிற அசரஃப் அலி ஆகியோரின் புகைப்படங்களும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன.
தற்போது இந்த நான்கு பேரும் காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த நான்கு பேர் குறித்து தகவல் தெரிவித்தால் நபருக்கு ரூ.2 லட்சம் வீதம் நான்கு குற்றவாளிகளுக்கும் 8 லட்சம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்றும் சிபிசிஐடி அறிவித்துள்ளது. தகவல் தெரிவிக்க வேண்டிய காவல்துறை அலுவலர்களின் எண்களையும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லலிதா ஜுவல்லரி கொள்ளையர்களைத் துரத்திப் பிடித்த போலீஸ்: வெளியான சிசிடிவி வீடியோ!