தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவைக்கு வரும் முதலமைச்சர்: பெரியளவில் பேனர்கள் வைப்பு! - கோயம்புத்தூர் வரவுள்ள முதலமைச்சர்

கோயம்புத்தூர்: முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு கோவையில் பல்வேறு இடங்களில் பெரியளவிலான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

பெரியளவில் பேனர்கள் வைப்பு
பெரியளவில் பேனர்கள் வைப்பு

By

Published : Jan 22, 2021, 4:21 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக நாளை (ஜன.23) முதலமைச்சர் பழனிசாமி வரவுள்ளார். இதனால், கோவையில் திரளான வரவேற்பு அளிக்கவுள்ளதாக நேற்று (ஜன.21) அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியிருந்தார். இந்நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில் பெரிய பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

பேனர்கள் வைப்பு

கோவை தேர்முட்டி, செல்வபுரம் ஆகிய பகுதியில் மாபெரும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் பேனர்கள் வைக்க கூடாது என நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் முதலமைச்சரின் வருகைக்காக மட்டும் இது போன்ற பெரியளவிலான பேனர்கள் வைக்கப்படலாமா என்ற கேள்வியை எதிர்க்கட்சியினர் எழுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: முதலமைச்சர் பற்றி கேள்வி கேளுங்கள்: சசிகலா குறித்த கேள்வியை தவிர்த்த செல்லூர் ராஜூ.

ABOUT THE AUTHOR

...view details