தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவைத் தென்றலின் மனைவி ராமகாந்தம் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் - kovai ramanadhan

‘கோவைத் தென்றல்’ என அழைக்கப்பட்டு வந்த மு.ராமநாதனின் துணைவியார் ராமகாந்தம் காலமானார்.

கோவைத் தென்றலின் மனைவி காலமானார் - மு.க.ஸ்டாலின் இரங்கல்
கோவைத் தென்றலின் மனைவி காலமானார் - மு.க.ஸ்டாலின் இரங்கல்

By

Published : May 19, 2021, 10:15 PM IST

சென்னை:இதுகுறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், " ‘கோவைத் தென்றல்’ என அழைக்கப்பட்டு வந்த கழகத்தின் முன்னாள் மக்களவை உறுப்பினர் கோவை மு. ராமநாதன் துணைவியார் ராமகாந்தம் காலமானார் என்ற செய்தியறிந்து பெரிதும் வருந்தினேன். கோவை மு. ராமநாதன் கடந்த 2019ஆம் ஆண்டு நம்மை விட்டுப் பிரிந்த நிலையில், அவரது துணைவியாரும் மறைந்திருப்பது வேதனை தருகிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், கழகத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சாதாரண சிறை விடுப்பு

ABOUT THE AUTHOR

...view details