தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே.20) முதல் பல்வேறு மாவட்டங்களில் கரோனா பணிகளை ஆய்வு செய்கிறார்.
கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த முதலமைச்சர் அதன்படி, முதல் நாளான இன்று கோயம்புத்தூருக்கு ஆய்வு மேற்கொள்ள வந்த அவர், கொடிசியா வளாகத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 253 படுக்கை வசதிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து கோயம்புத்தூர், சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தனியார் கல்லூரியில் 800 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்தார். மேலும், அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் சக்கரபாணி, மா. சுப்ரமணியம், ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: நயன்தாராவின் தடுப்பூசி: சர்ச்சையும், விளக்கமும்!