கோயம்புத்தூர்:பொள்ளாச்சியில், கோவை ரோட்டில் தனியார் கல்யாண மண்டபத்தில், வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு தொழில்நுட்ப பிரிவினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “அதிமுகவில் இளைஞர்கள், இளம்பெண்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறீர்கள். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை தடுக்கும் விதமாக தொழில்நுட்ப பிரிவுவில் உள்ளவர்கள் செயல்படுகிறீர்கள். வரும் 2021ஆம் சட்டப்பேரவைத் தேர்தலில் தொழில்நுட்ப பிரிவினர் முக்கிய பங்கு வகிப்பார்கள். எதிர்காலத்தில், நீங்கள் சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடிய தகுதி பெறுவீர்கள்” எனப் பேசினார்.