தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘தேர்தலைச் சந்திக்க திமுக தயங்குகிறது’ - முதலமைச்சர் பழனிசாமி - DMK did not hold a local election

கோயம்புத்தூர்: உள்ளாட்சி தேர்தலைச் சந்திக்க திமுக தயங்குகிறது என கோவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

cm palanisamy
cm palanisamy

By

Published : Dec 9, 2019, 7:32 AM IST

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘தேர்தல் தள்ளி போகக் காரணம் திமுகதான். 2016ஆம் ஆண்டு தேர்தல் அறிவித்தவுடன் திமுக நீதிமன்றம் சென்றதால் தேர்தல் நடைபெறாமல் போனது. இதனால் யாரால் இந்த உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போகிறது என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார்.

முதலமைச்சர் பழனிசாமி

27 மாவட்டங்களில் எவ்வித தடையும் இல்லாமல் தேர்தல் நடத்திக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இப்போதும் ஸ்டாலின் பல குற்றச்சாட்டுகள் சொல்லி இந்தமுறையும் தேர்தலை தள்ளிப் போட எண்ணுகிறார். இதன் மூலம் திமுக இந்த தேர்தலைச் சந்திக்க தயங்குகிறது.

மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு கஜானா காலியாக உள்ளது என்று பல்வேறு பொய் வதந்திகளைக் கூறி மக்களைக் குழப்பி வருகிறார். மழை காரணத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டு வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. இன்னும் இருபது நாட்களில் இது சரி செய்யப்படும்’ என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெண்களைக் காக்கும் 'காவலன்' செயலி: களத்தில் இறங்கிய சென்னை காவல் ஆணையர்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details