இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, ‘தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி வருகிற 30ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையிலிருந்து விவசாய பாசனத்துக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தண்ணீர் திறக்க உள்ளார்.
இதன் மூலம் தமிழ்நாடு பகுதியான சிறுவை, வீடூர், பொம்பூர், பொன்னம்பூண்டி, ஐவேலி, நெமிலி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் 2,200 ஏக்கரும், புதுச்சேரி பகுதியில் ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெற்று விவசாயிகள் பயனடைவார்கள்.