கோவை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 40ஆவது வார்டில் , டெங்கு பிரிவில் சுகாதார பணியாளர்களாக தினக்கூலி அடிப்படையில் அமுதா , காளியம்மாள் , ரத்னா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆவராம்பாளையம் இளங்கோ நகரில் இவர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது , மாநகராட்சியின் சுகாதார அதிகாரி, சுகாதார ஆய்வாளர் இருவரும் டெங்கு தடுப்புப் பணிகள் குறித்து, மேற்பார்வையிட வந்துள்ளதாகத் தெரிகிறது. அப்போது மூவரும் கோட் அணியாமல் வேலை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து, சுகாதார அதிகாரி கட்டாயம் கோட் அணிந்துதான் வேலை செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார்.
இதையடுத்து அமுதா தனக்கு கோட் சிறியதாக இருப்பதால் பயன்படுத்த முடியவில்லை எனவும், காளியம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் கோட் அணியாமல் இருப்பதாகவும், ரத்னாவிற்கு இன்னும் கோட் வழங்கப்படவில்லை எனவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.