தமிழ்நாட்டில் சுகாதாரப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி அவர்கள் பணியில் ஈடுபடும் பொழுது, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் அரசு சார்பில் வழங்கப்படும்.
இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சோமனூர் பகுதியில் துப்புரவுப் பணியில், ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு பேரூராட்சி சார்பில், எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை.