கோயம்புத்தூர்பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தை, சிஐடியூ மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் முற்றுகையிட முயன்றனர். தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் பெரும்பாலும் ஹிந்தி தெரிந்தவர்களே பணியில் இருப்பதாகவும் தமிழ் தெரிந்த அலுவலர்களை நியமிக்கக்கோரி அந்த முற்றுகை நடைபெறவிருந்தது.
ஆனால், இதனையறிந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மேலாளரை சந்திக்க ஏற்பாடு செய்ததையடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய CITU மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, “ஒன்றிய அரசு நிறுவனங்களான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், வங்கி, ரயில்வே போன்ற அலுவலகங்களில் ஹிந்தி தெரிந்தவர்களையே நியமிக்கிறார்கள்.