தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டம்: முதலமைச்சரிடம் இஸ்லாமிய அமைப்பினர் கோரிக்கை! - தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்

கோவை: சட்டப்பேரவை கூட்டத்தொடரில் என்.ஆர்.சி, என்.பி.ஆர் சட்டங்கள் தொடர்பாக நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக முதலமைச்சரை சந்தித்த பின் இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

citizenship-amendment-act-islamic-organization-requests-to-chief-minister
citizenship-amendment-act-islamic-organization-requests-to-chief-minister

By

Published : Mar 3, 2020, 10:32 PM IST

சேலம் செல்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் மாவட்ட ஐக்கிய ஜமாத் அமைப்பினர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசினர். அப்போது மற்ற மாநிலங்களை போல என்.ஆர்.சி, என்.பி.ஆர் சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற கோரி வலியுறுத்தினார்.

மேலும் என்.பி.ஆர் கணக்கெடுப்பில் 2010ஆம் ஆண்டு இருந்த அம்சங்களே போதும் என மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து மனு அளித்தனர். இஸ்லாமியர்களின் கோரிக்கை மனுவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார்.

முதலமைச்சரிடம் இஸ்லாமிய அமைப்பினர் கோரிக்கை

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச்செயலாளர் ஜப்பார், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றை அமல்படுத்துவது இஸ்லாமியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதை முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளதாகவும், வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்த என்.ஆர்.சி, என்.பி.ஆர், சட்டங்கள் தொடர்பாக நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.

இதையும் படிங்க:சாலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு - கிராம மக்கள் கடையடைப்பு போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details