மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவையில் அனைத்து ஜமாத் அமைப்பின் சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இந்த மனிதச் சங்கிலி போராட்டம் ஆத்துப்பாலம் முதல் போத்தனூர் வரை நடைபெற்றது. போராட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஐந்தாயிரத்துக்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்.
அனைவரும் மத்திய அரசை கண்டித்தும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். ஒற்றுமையாக வாழும் மக்களை குலைக்க இந்த சட்டம் வந்துள்ளது என்று கண்டனம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணி.!