தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை.. சினிமா தயாரிப்பாளர் சிக்கியது எப்படி? - பொள்ளாச்சி கல்லூரி மாணவி

பொள்ளாச்சியில் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி கோவை கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவாக இருந்த திரைப்பட தயாரிப்பாளர் பார்த்திபன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை.. சினிமா தயாரிப்பாளர் சிக்கியது எப்படி?
பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை.. சினிமா தயாரிப்பாளர் சிக்கியது எப்படி?

By

Published : Nov 5, 2022, 3:51 PM IST

கோவை:பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் புகார் கொடுத்தார். அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ”எனக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாமாண்டு படித்து வந்தேன். அப்போது முகநூலில் டி.என்-41 என்கிற படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு அழகான பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

அதில் இருந்த செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு பேசியபோது, அப்போது பேசிய நபர் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள விடுதியில் நடிகைகள் தேர்வு நடப்பதாக கூறினார். இதையடுத்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் பொள்ளாச்சிக்கு சென்றேன். அப்போது அங்கு விடுதியில் இருந்த கரூரை சேர்ந்த பார்த்திபன் (வயது 30) என்பவர் தன்னை படத்தின் தயாரிப்பாளர் என்று அறிமுகம் செய்து கொண்டார். பின்பு எனக்கு குளிர்பானம் கொடுத்தார். அதை குடித்த சில நிமிடங்களில் நான் மயங்கிவிட்டேன். சுயநினைவு இல்லாமல் இருந்த என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.

பின்னர் மயக்கம் தெளிந்து இது குறித்து அவரிடம் கேட்டதற்கு உனக்கு 17 வயது தான் ஆகிறது. 18 வயதானதும் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார். மேலும், அவர் என்னை படத்தின் கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.

இதே போன்று பலமுறை ஆசை வார்த்தை கூறி என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் நான் கருவுற்றேன். பின்னர் உடனடியாக தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி வலியுறுத்தினேன். அதற்கு அவர், நீ குழந்தை பெற்றால் கதாநாயகியாக நடிக்க முடியாது என்று கூறி சில மாத்திரைகளை வாங்கி கொடுத்து கர்ப்பத்தை கலைத்து விட்டார்.

மேலும், அவர் என்னை கதாநாயகியாக நடிக்க வைக்கவில்லை, திருமணமும் செய்துக்கொள்ளவில்லை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டார். எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொள்ளாச்சி மகளிர் காவல் நிலைய போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் பார்த்தீபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பார்த்திபன் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:நில முதலீட்டில் பண மோசடி; ஊழியர்கள் மீது பொய் புகார்...உரிமையாளருக்கு போலீசார் வலை...

ABOUT THE AUTHOR

...view details