கடந்த அக்டோபர் 8ஆம் தேதி இலங்கை கொழும்புவிலிருந்து கோவை விமான நிலையம் வந்த விமான பயணிகளிடம், வான் நுண்ணறிவு அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
இச்சோதனையில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அக்பர் அலி, சென்னையைச் சேர்ந்த அன்சரலி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல் காதர், ஹைதர் அலி, சாகுல் அமீது, ஹாசன் ரியாஸ், இஸ்மாயில் ஆகிய ஏழு பேரின் உடமைகளில் ரூ.69.93 லட்சம் மதிப்புள்ள, 23 ஆயிரத்து 310 சிகரெட் பண்டல்கள் சிக்கியது.
மேலும் அதில், நான்கு லட்சத்து 66 ஆயிரத்து 200 வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தன. இதனையடுத்து, அவர்களிடமிருந்து சிகரெட் பண்டல்கள் வான் நுண்ணறிவு அலுவலர்களால் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மத்திய வருவாய்ப் புலனாய்வு பிரிவு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவந்த நிலையில் தற்போது அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:
சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்புள்ள அழகு சாதன மருந்துகள் பறிமுதல்