தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சின்னதடாகம் ஊராட்சி தலைவர் தேர்தல் வழக்கு: மீண்டும் அதிமுக வெற்றி! - Kovai district news

கோவை சின்னதாடகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவில் மீண்டும் அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சின்னதடாகம் ஊராட்சி தலைவர் தேர்தல் வழக்கு.. மீண்டும் அதிமுக வெற்றி!
சின்னதடாகம் ஊராட்சி தலைவர் தேர்தல் வழக்கு.. மீண்டும் அதிமுக வெற்றி!

By

Published : Feb 2, 2023, 2:05 PM IST

கோயம்புத்தூர்:கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டம் சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக ஆதரவு பெற்ற சுதா, அதிமுக ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு மற்றும் மல்லிகா ஆகியோர் போட்டியிட்டனர். இதில் திமுக ஆதரவு பெற்ற சுதா 2,553 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் மீண்டும் வாக்கு எண்ணப்பட்டு, அதில் அதிமுக ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு 2,554 வாக்குகளும், சுதா 2,551 வாக்குகளும் பெற்று 3 வாக்குகள் வித்தியாசத்தில் செளந்திரவடிவு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து திமுக ஆதரவு வேட்பாளர் சுதா, கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம், சின்னதடாகம் ஊராட்சிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கடந்த ஜனவரி 5ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. இதனால் ஜனவரி 24ஆம் தேதி மறுவாக்கு எண்ணிக்கை, குருடம்பாளையம் அருணா நகர் சமுதாய கூடத்தில் வைத்து நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று (பிப்.2) கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் செளந்தரவடிவு 2 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக நீதிபதி ராஜசேகர் அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் நடந்து முடிந்த மறுவாக்கு எண்ணிக்கையின் படி, மொத்தம் பதிவான 5,375 ஓட்டுகளில் செளந்திரவடிவு 2,553, சுதா 2,551 மற்றும் மல்லிகா 65 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க:சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை நிறைவு!

ABOUT THE AUTHOR

...view details