வரும் 11ஆம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி ஆகிய இருவரும் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளனர். இதையடுத்து, அங்குள்ள சிற்ப கலைகள் நிறைந்த கட்டடங்களான அர்ஜுன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்டவற்றை பார்வையிடுகின்றனர்.
இந்நிகழ்வில், இருநாட்டுத் தலைவர்களும் இரு நாட்டு உறவு, வர்த்தக மேம்பாடு, முக்கிய பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மேலும், இப்பேச்சுவார்தையில் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, சீன அதிபர் வருகையையொட்டி சென்னை, மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன் படி, வரும் 11ஆம் தேதி சீன அதிபர் வரும் விமானம் சென்னையில் தரையிறங்கும்போது, அந்த வேளையில் பயணிகள், சரக்கு விமானங்கள் போக்குவரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.