தமிழ்நாடு

tamil nadu

"அம்மாவை அடிக்கும் அப்பா மீது நடவடிக்கை எடுங்க" - சார் ஆட்சியரிடம் பிள்ளைகள் மனு!

By

Published : Feb 8, 2023, 2:29 PM IST

தாயை அடித்து துன்புறுத்தும் தந்தை மீது நடவடிக்கை எடுக்க கோரி, எட்டாம் வகுப்பு மாணவி மற்றும் அவரது தம்பி இணைந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

தந்தை மீது பிள்ளைகள் மனு
தந்தை மீது பிள்ளைகள் மனு

தந்தை மீது பிள்ளைகள் மனு

கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் மலையாண்டிபட்டினத்தை சேர்ந்தவர்கள் சரவணன் - செல்வி தம்பதி. இவர்களுக்கு மதுஸ்ரீ என்ற மகளும் சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர். மதுஸ்ரீ அங்குள்ள அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் இவரது தம்பி சந்தோஷ் ஆறாம் வகுப்பு படித்த வருகிறார்.

இந்நிலையில், மதுஸ்ரீ தனது தம்பி சந்தோஷுடன் இணைந்து பள்ளி சீருடையுடன் பொள்ளாச்சி சார்- ஆட்சியில் அலுவலகத்திற்குச் சென்று மனு அளித்தனர். அதில், “ தனது தந்தை சரவணன் தாய் செல்வி ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனது தாயின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறோம்.

தந்தை தினம் தோறும் குடித்துவிட்டு வந்து தனது தாயாரை நாள்தோறும் அடித்து உதைத்து மிரட்டல் விடுத்து வருகிறார். வீட்டில் உள்ள பாத்திரங்கள் தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்துச் சேதப்படுத்துவது தொடர்கதையாக வருகிறது.இதுகுறித்து உள்ளூரில் உள்ள கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் போலீசார் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர். எனவே எனது தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து சிறுமி மதுஸ்ரீ கூறுகையில், “கஷ்டப்பட்டு எங்களை வளர்த்து ஆளாக்கி வரும் அம்மாவைத் தினந்தோறும் குடித்துவிட்டு தகராறு அப்பா ஈடுபட்டு வருகிறார். எவ்வளவோ முறை கூறியும் திருந்துவதாக இல்லை. மேலும் பெற்ற மகள் என்று பாராமல் தகாத வார்த்தையில் பேசி வருகிறார். இதனால் பள்ளி செல்வதாகக் கூறி பொள்ளாச்சி சார்-ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளோம். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்” எனக் கூறினார். பின்னர் அங்கிருந்து இருவரும் சென்றனர்.

இதையும் படிங்க: ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு கிரானைட் கடத்தல்.. சந்திரபாபு நாயுடு எழுதிய அவசர கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details