தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் - ரூ.60லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல் - Coimbatore District News

கோவை: முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு முகாமில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வேலுமணி கலந்துக் கொண்டு ரூ.60லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

By

Published : Nov 3, 2019, 11:29 PM IST

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் கோவை ஆர்எஸ் புரத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வேலுமணி கலந்துகொண்டு மக்களுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு முகாம்

பின்னர் கூட்டத்தில் அவர் பேசுகையில், ”சாலை விரிவாக்கத்தினால் கோவையில் 80 விழுக்காடு உயிரிழப்புகள் குறைந்துள்ளன. பில்லூரில் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தினால் கோவையில் 50 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்னை இருக்காது. ஆனால் சிலர் இதை எதிர்க்கின்றனர்.

இந்தத் திட்டத்தை நாங்கள் கண்டிப்பாக கொண்டு வந்தே தீருவோம். அதுமட்டுமன்றி தமிழ்நாட்டில் அதிக மேம்பாலங்கள் சென்னையில்தான் உள்ளதென பலரும் கூறி வருகிறார்கள். இன்னும் சிறிது காலத்தில் அதிக மேம்பாலங்கள் உள்ள இடம் கோவை என்று மாறப்போகிறது” என்றார்.


இதையும் படிங்க: 11,925 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.59 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

ABOUT THE AUTHOR

...view details