தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவைக்கு வரும் முதலமைச்சர்... கண்துடைப்பிற்காக செய்யப்பட்ட பணிகளால் வாகன ஓட்டிகள் அதிருப்தி - Purification

தமிழ்நாடு முதலமைச்சர் கோவை வருகையையொட்டி மாவட்ட நிர்வாகம் கண் துடைப்பிற்காக அரையும் குறையுமாக சாலைப்பணிகளை செய்துள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

கோவைக்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம்...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோவைக்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம்...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

By

Published : Aug 23, 2022, 9:39 PM IST

கோவை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக கோவைக்கு இன்று இரவு வருகை தர உள்ளார். நாளை ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின், 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். பின்னர் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டி பகுதியில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் கோவை வருகையையொட்டி, முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் பயணிக்க உள்ள சாலைகளில் சாலைகளை செப்பனிடுதல், தூய்மைப்படுத்துதல் உள்ளிட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ராமநாதபுரம் முதல் போத்தனூர் சாலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கண் துடைப்பிற்கான சீரமைப்புப் பணிகளை செய்து வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் செல்லும் அச்சாலையில் ஒரு பக்கம் மட்டுமே, சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் வண்ணம் பூசப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் கண் பார்வையில் படும் ஒரு பக்கம் மட்டுமே வண்ணம் பூசப்பட்டுள்ளது, மறுபக்கம் வண்ணம் பூசப்படவில்லை எனவும்; மாவட்ட நிர்வாகம் முதலமைச்சர் வருகைக்காக கண் துடைப்பிற்காக இப்பணிகளை செய்துள்ளதாகவும், முழுமையாக பணிகளை செய்யாமல் அரையும், குறையுமாக அவசர கதியில் செய்துள்ளதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

கோவைக்கு வரும் முதலமைச்சர்... கண்துடைப்பிற்காக செய்யப்பட்ட பணிகளால் வாகன ஓட்டிகள் அதிருப்தி

இப்பணிகளை முழுமையாக செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் தைவான் நாட்டின் Hong Fu நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு

ABOUT THE AUTHOR

...view details