கோவை: 44-ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி துவங்குகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் செஸ் ஒலிம்பியாட் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவை .
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் கல்லூரி மாணவர்கள் நடை ஓட்டம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கோவையை சேர்ந்த பல்வேறு தனியார் கல்லூரி(ஹிந்துஸ்தான், கற்பகம், ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி) மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு நடை ஓட்டம் நடைபெற்றது.