கோயம்புத்தூர்:பீளமேடு பகுதியில் பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்ற தனியார் பள்ளி வாகனத்தை வழிமறைத்து தட்டி கேட்ட Swiggy ஊழியரை போக்குவரத்து காவலர் ஒருவர் தாக்கினார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட ஊழியர் மாநகர காவலர் ஆணையர்யிடம் புகார் அளித்தார். இந்நிலையில் காவலர் அந்த ஊழியரை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.