தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பைக்கில் லிப்ட் தருவதுபோல் மூதாட்டியிடம் நகை கொள்ளை! - காட்டூர் காவல் நிலையம்

கோயம்புத்தூர்: மூதாட்டியிடம் நூதன முறையில் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற நபரை காவலர்கள் தீவிரமாக தேடிவருகின்றனர்.

காட்டூர் காவல் நிலையம்
காட்டூர் காவல் நிலையம்

By

Published : Oct 20, 2020, 9:24 PM IST

கோயம்புத்தூர் நாடார் வீதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(68). இவர் அக்டோபர் 16ஆம் தேதியன்று காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இந்தப் பகுதியில் அதிகப்படியான சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன.

ஆகவே நகையை பையில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள் என எச்சரித்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய மூதாட்டி, கழுத்தில் கிடந்த சங்கிலியை கழட்டி பையில் போட்டுள்ளார்.

இந்நிலையில் அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் லிப்ட் கொடுப்பதுபோல் ஏமாற்றி அவரிடமிருந்த நகையை பறித்து சென்றுவிட்டார்.

இது குறித்து காட்டூர் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details