கோவையில் பாலக்காடு- மதுக்கரை இடையேயான ரயில் பாதையில், ரயிலில் மோதி யானை பலியாகும் நிகழ்வு அடிக்கடி ஏற்படுகிறது. இந்த பிரச்சினை குறித்து ஆய்வு மேற்கொண்டு அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு சிறப்பு குழு ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.
அக்குழுவை சேர்ந்த விஞ்ஞானி செல்வன், ஒன்றிய சுற்றுச்சூழல் துறை யானைகள் திட்ட பிரிவு அலுவலர் ப்ரஜ்னாபாண்டா தலைமையிலான குழு மதுக்கரை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டது.