கோவை ஆனைக்கட்டி சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் புதிதாக அமைத்துள்ள ஆராய்ச்சி கூடத்தை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார். அப்போது, சலீம் அலி ஆராய்ச்சி மைய நிர்வாகிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியர்கள் இயற்கையை நேசிக்கக் கூடியவர்களாக உள்ளனர். அதற்கு சில அச்சுறுத்தலும் இருந்துவருகிறது. அவை மிக விரைவில் சரிசெய்யப்படும்.
குறிப்பாக 40 மில்லியனாக இருந்த கழுகு இனம் தற்போது 1000ஆக குறைந்துள்ளது. இந்த பிரச்னையில் கவனம் செலுத்தப்பட்டுவருகிறது. 2021ஆம் ஆண்டு உலக இடம்பெயர் பறவைகள் மாநாட்டை இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதனால், மக்களிடையே பறவைகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் தண்ணீர் மற்றும் தீவனம் அமைக்க நிதி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் வன விலங்குகள் ஊருக்குள், விவசாய நிலங்களுக்குள் வருவது தடுக்கப்படும்.
வனப்பகுதியை ஒட்டிய கனிமவளங்களை சுரண்டுவது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இஸ்ரோவின் உதவியால் வரைப்படம் மூலம் மணல் எடுப்பதை கண்காணிக்க திட்டமிட்டுள்ளோம் இதன் மூலம் மாபியா கும்பல் தடுக்கப்படும் என்றார்.