2019 -2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், "இந்த பட்ஜெட்டில் சிறு குறு தொழில் முன்னேற்றத்திற்கு அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பட்ஜெட்டில் சிறு குறு தொழில்கள் பயனடையும் வகையில் எதுவும் இல்லை.
ஜாப் ஆர்டர் செய்பவர்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்தும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. தொழில் வளர்ச்சிக்குப் பெறப்படும் கடனுக்கு வட்டி ஐந்து விழுக்காடாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாகவும் அறிவிப்பு இடம்பெறாதது ஏமாற்றம் அளித்துள்ளது.