தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விரைவில் பாஜகவுக்கு பிரபலங்கள் பரப்புரை செய்வர்': எல்.முருகன் - bjp propaganda

கோயம்புத்தூர்: முக்கிய பிரபலங்கள் கூடிய விரைவில் பாஜகவிற்காக பரப்புரை செய்ய வருவார்கள் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

bjp murugan
பாஜக முருகன்

By

Published : Mar 15, 2021, 12:34 PM IST

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள மூன்று தொகுதிகளுக்கும் கூடிய விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.

பாஜகவின் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். பாஜகவில் அனைவருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வேட்பாளர்கள் தேர்வு என்பது வேட்பாளர்களின் அரசியல் பின்புலம், அரசியல் சேவை உள்ளிட்டவற்றைக் கொண்டு தேர்வு செய்யப்படுகிறது.

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்

பாஜக தொண்டர்கள் அனைவரும் கட்டுக்கோப்பாக, கட்சி கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள். விரைவில் முக்கியப் பிரபலங்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளனர்'என்றார்.

இதையும் படிங்க:'அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தை எந்தக் காலத்திலும் அசைக்க முடியாது' - தமாக வேட்பாளர் பேச்சு

ABOUT THE AUTHOR

...view details