தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமுகை அருகே நடந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு - mettupalayam

கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை அருகே நேற்று மாலை நடந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சிறுமுகை அருகே நடந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள்

By

Published : Jun 17, 2019, 10:10 AM IST

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். ஆலைத் தொழிலாளியான இவர், நேற்று தனது குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையத்தில் நடந்த திருமண விழாவில் கலந்துகொண்டு சிறுமுகை திரும்பிக் கொண்டிருந்தார்.

இருசக்கர வாகனத்தில் மனைவி சவுமியா, மகன் நிதின், மகள் கவுசிகா ஆகியோருடன் திரும்பிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த கார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடேசனும், அவரது ஏழு வயது மகள் கவுசிகாவும் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த சவுமியா, நான்கு வயது மகன் நிதின் ஆகியோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து சிறுமுகை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சிறுமுகை அருகே நடந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள்

இந்நிலையில் இந்த விபத்து அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details