கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த கூட்டுறவு காலனி பகுதியில் சிறுத்தை ஒன்று நாயை வாயில் கவ்விக் கொண்டு செல்லும் வீடியோ அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட டவுன் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு காலனி பகுதி மற்றும் வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பகுதியில் அதிக அளவில் சிறுத்தை நடமாடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இரவு நேரங்களில் கலைக்கல்லூரி வளாக கழிப்பறை பகுதியில் இருந்து இரண்டு சிறுத்தைகள் வெளியே நடந்து வரும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் கோவை, பொள்ளாச்சி பகுதிகளுக்கு சென்று விட்டு இரவு நேரங்களில் தங்களது குடியிருப்புக்குள் செல்ல அச்சப்படுகின்றனர்.