தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிசிடிவி: அன்னூர் பேருந்து நிலையத்தில் பயணியிடம் செல்போன் பறிப்பு! - செல்போன்

அன்னூர் பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போன் பறித்துச் செல்லும் போது தவறி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்னூர் பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரிடம் செல்போன் பறிப்பு
அன்னூர் பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரிடம் செல்போன் பறிப்பு

By

Published : Oct 21, 2022, 10:13 PM IST

கோவை:அன்னூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட ஓதிமலை சாலை, மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழிகேட்பது போல் நடித்து செல்போன் பறித்துச் சென்ற சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவன் உட்பட மூவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவனைக் கோவை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும், மற்ற இருவரைக் கோவை மத்தியச் சிறையிலும் அடைத்தனர்.

இந்நிலையில் அன்னூர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்த பயணியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போனை பறித்துச் செல்லும் காட்சியும் அப்போது இருவரும் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் செல்போனை பறித்துக்கொண்டு செல்கையில் இருவரும் தடுமாறி கீழே விழுவதும், அதில் ஒருவர் எழுந்து ஓட்டம் பிடித்ததும், மற்றொருவர் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பித்துச் செல்வதும் பதிவாகியுள்ளது.

அன்னூர் பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரிடம் செல்போன் பறிப்பு

இதையும் படிங்க:தார்ப்பாய் முருகன் போல் திருடும் மர்ம கும்பல் - போலீசார் திணறல்..!

ABOUT THE AUTHOR

...view details