கோவை: பொள்ளாச்சியில் பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வில், கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திவந்த சிபிஐ அலுவலர்கள், கடந்த ஜனவரி மாதம் இவ்வழக்கில் தொடர்புடைய பொள்ளாச்சியைச் சேர்ந்த அருளானந்தம், ஹேரென்பால், பாபு ஆகியோரை கைது செய்தனர்.
கூடுதல் குற்றப்பத்திரிக்கை
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட 9 பெண்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியைச் சேர்ந்த அருண்குமார் என்ற நபர் கைது செய்யப்பட்டார். கூடுதலாக இவ்வழக்கில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ அலுவலர்கள் இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.