தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்

கோயம்புத்தூர்: வால்பாறையில் உள்ள பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.

கோயம்புத்துார்: வால்பாறையில் உள்ள பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை பகுதிகளில் கிருமி நாசினியை தெளிக்கும் தீவிர பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.
கோயம்புத்துார்: வால்பாறையில் உள்ள பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை பகுதிகளில் கிருமி நாசினியை தெளிக்கும் தீவிர பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.

By

Published : Apr 15, 2020, 5:05 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்பாறையில் உள்ள பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை மற்றும் இதர பகுதிகளில் தீயணைப்புத் துறையினர் கிருமி நாசினிகளை தெளித்தனர்.

கிருமி நாசினி தெளிக்கும் தீவிர பணியில் தீயணைப்பு வீரர்கள்

மேலும் 144 தடை உத்தரவு உள்ள நிலையில் நகராட்சி நிர்வாகம் தங்களது பணியாளர்களை வைத்து வால்பாறை பகுதிகளில் உள்ள குடியிருப்பு, எஸ்டேட் பகுதிகளிலும் கிருமி நாசினி கொண்டு தெளிக்கப்பட்டது.

மேலும், ஒரு மீட்டர் இடைவெளி விட்டுச் செல்ல ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பொது இடங்களிலும் காய்கறி கடைகளிலும் இடைவெளி விட்டு நடந்து செல்லுமாறு நகராட்சி ஆணையாளர் ஒலிபெருக்கி, துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க:தொடங்கப்பட்ட நேரத்திலேயே நிறுத்தப்பட்ட கிருமி நாசினி சுரங்கப் பாதை

ABOUT THE AUTHOR

...view details