கோவை மாவட்டம், மதுக்கரை அருகே குமிட்டிபதி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோயிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஒருபிரிவினர் நடனமாடிக் கொண்டே மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு சென்றுள்ளனர்.
கோயில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல் - ஆறு பேர் காயம்
கோவை: குமிட்டிபதி பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் இரு சமுதாயத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஆறு பேர் காயமடைந்தனர்.
இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் சுமார் ஆறு பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அசாம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.