கோவை மார்டின் குரூப் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தவர் பழனிசாமி. இவர் நேற்று காரமடை பகுதியில் உள்ள குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தை சாவில் மர்மம் இருப்பதாக மகன் நீதிபதியிடம் புகார்! - மகன் நிதிபதியிடம் புகார்
கோவை: தனது தந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரை யாரோ திட்டமிட்டு கொலை செய்துள்ளதாகவும் லாட்டரி மார்டினின் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றிய பழனிசாமியின் மகன் குற்றம்சாட்டியுள்ளார்.
![தந்தை சாவில் மர்மம் இருப்பதாக மகன் நீதிபதியிடம் புகார்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3191966-thumbnail-3x2-cas.jpg)
ரோகின் குமார்
இந்நிலையில், தனது தந்தை தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும், யாரோ அவரை திட்டமிட்டு கொலை செய்திருப்பதாகவும் பழனிசாமியின் மகனான ரோகின் குமார் தலைமை குற்றவியல் நீதிபதியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். மேலும், அவர் பணிபுரிந்த அலுவலகத்தில் உள்ள இருவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.