கோவை குனியமுத்தூர் அருகே சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் செங்குளம் அமைந்துள்ளது. இந்த குளம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்திற்கும் கைகொடுக்கிறது.கடந்த சில ஆண்டுகளாக கேட்பாரற்று கிடந்த செங்குளம், அண்மையில் தன்னார்வலர்களின் முயற்சியினால் தூர்வாரப்பட்டது.
இந்நிலையில், விதிமுறைகளை மீறும் வகையில் குளத்தை இரண்டாக பிரித்து குளத்தின் நடுவே சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சாலை அமைத்துள்ளது அரசு துறை நிறுவனமான தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம். எவ்வித அனுமதியும் இல்லாமல் குளத்திற்கு நடுவே மண் சாலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், மண் சாலையை தார்சாலையாக மாற்றும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் தற்போது புகார் எழுந்துள்ளது.