கோவை குனியமுத்துார் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமிக்குச் சொந்தமான சங்கிதா மருத்துவமனை ஒன்று உள்ளது. அதன் நிர்வாகத்தை அவரது மனைவி கவனித்துவரும் நிலையில், நேற்று இரவு சங்கிதா மருத்துவனையில் சிகிச்சைக்காக வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மருத்துவமனைக்கு சீல் வைப்பு அவருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் கிருஷ்ணசாமியின் மனைவிக்கும் கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து மருத்துவமனைக்குச் சீல் வைக்கப்பட்டு, அவரது இல்லம், மருத்துவமனை செல்லும் பாதை முழுவதையும் சுகாதாரத் துறையினர் அடைத்தனர்.
இதேபோல் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாளர் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அலுவலகத்தின் இரண்டாம் தளம் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, அத்தளத்திற்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. பெரிய கடைவீதியிலுள்ள பிரபல பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் ஊழியர்களுக்குக் கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த அங்காடியும் மூடப்பட்டது.
இதையும் படிங்க:காவல் துறையினரின் வீடுகளுக்கு பால் விநியோகம் இல்லை: பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு