கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, கட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்ட எங்கள் கட்சியை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கொந்தளிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
நம்பிக்கை இல்லாத தீர்மானம் எதன் அடிப்படையிலானது தெரியவில்லை- முதலமைச்சர் - edapadi pazhaniami
கோவை: சபாநாயகர் மீது திமுகவினர் எந்த அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர் என்பது தெரியவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
மேலும் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் திமுக, அமமுக இடையே உள்ள நெருக்கம் தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஸ்டாலின் சபாநாயகர் மீது எதன் அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளார் என்பது எனக்கு தெரியவில்லை.
அதேபோல் தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் உளவுத்துறை தேர்தல் ஆணையத்தில் கட்டுபாட்டில் இருப்பதால் தேர்தல் முடிவுகள் தொடர்பான அறிக்கை வெளிவரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.