கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் ஆகிய நான்கு பேரையும் கோவை மாவட்டக் காவல்துறையினர் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இந்த பாலியல் வன்கொடுமையில் சம்பந்தப்பட்ட நால்வருக்கும் கடுமையான தண்டனை அளிக்க வேண்டுமென்று தமிழகம் முழுவதும் பல கல்லுாரிகளில் போராட்டம் நடைபெற்றது. இந்த வழக்கானது சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி 3-வது நாளாக ஆய்வு! - கோவை
கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி காவல் துறையினர் மூன்றவாது நாளாக இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி அருகே சின்னப்பன் பாளையம் கிராமத்தில் குற்றவாளியான திருநாவுக்கரசர் வீடு உள்ளது. இந்த வீட்டில் சிபிசிஐடி தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக சோதனையிட்டு வருகின்றனர். சிபிசிஐடி போலீசார் சோதனைத்தேர்வு அவசரம் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு வாகனத்தில் ரகசியமாக வந்த சிபிசிஐடி காவல் துறையினர் திருநாவுக்கரசு வீட்டுக்கும் சென்று ஆய்வு நடத்தினர்.
மேலும், அவரது வீட்டின் வரைபடங்களை நிபுணர் குழுவை வைத்து வரைந்து எடுத்துச் சென்றதாகவும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வீடியோ ஆதாரங்களை வைத்து சம்பவ இடத்தை ஒப்பிட்டுப் பார்த்து அதற்கான வரைபடங்களையும் வரைந்து எடுத்துச் சென்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதன் மூலம் வீடியோவில் இருக்கும் வீடும், சம்பவம் நடந்த இடம் எது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.