இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் அங்கொடா லொக்கா. இவர் கடந்த ஆறு மாதங்களாக கோயம்புத்தூர் விமான நிலையம் அருகிலுள்ள சேரன் மாநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவந்துள்ளார். கடந்த ஜூலை 3ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவரின் உடலை போலியான ஆவணங்கள் தயாரித்து மதுரையில் எரித்துள்ளனர்.
இவரின் மரணத்திற்குப் பிறகு தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்துவருகின்றன. இந்த வழங்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அங்கொடா லொக்காவின் உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் மதுரை மயானத்தில் கொடுக்கப்பட்ட சான்றிதழும் வெளியாகியுள்ளன.