தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீது வழக்குப்பதிவு - காரணம் என்ன? - covai latest news

காவல் துறையினரை வேலை செய்யவிடாமல் தடுத்ததாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு பதிவு
வழக்கு பதிவு

By

Published : Jan 1, 2022, 1:17 PM IST

கோவை: விளாங்குறிச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாகா பயிற்சி முகாம் எட்டு நாள்களாக நடைபெற்றுவந்தது. இந்தப் பயிற்சி முகாமினைக் கண்டித்து பெரியாரிய, திராவிட அமைப்பினர், நாம் தமிழர் கட்சியினர் அப்பள்ளியின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதுசெய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று அங்கு ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் அங்குப் பாதுகாப்புப் பணிகளைப் பார்வையிட வந்த சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரன் பயிற்சி நடைபெறும் தனியார் பள்ளியின் வாசலில் நின்றுகொண்டிருந்த ஆர்எஸ்எஸ், இந்துத்துவ அமைப்பினரை பள்ளி வளாகத்திற்குள் செல்ல அறிவுறுத்தினார்.

அப்போது அவர்கள் பள்ளி வளாகத்திற்குள் செல்ல மறுப்புத் தெரிவித்து துணை ஆணையர் ஜெயச்சந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி வளாகத்திற்குள் செல்லாமல் காவல் துறையினருடன் முறையீடு செய்த நிலையில் காவல் துறையினருக்கும் இந்துத்துவ அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

காவல் துறையினருக்கும் இந்துத்துவ அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு

இந்நிலையில், இது தொடர்பாக பீளமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜ்குமார் அளித்த புகாரின்பேரில் அடையாளம் தெரிந்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீது அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய இரண்டு பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிஙக: கொய்யா என நினைத்து விஷ காய்களைத் தின்ற சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி

ABOUT THE AUTHOR

...view details