கோவை ,காந்திபுரம் பகுதி, வி.கே.மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை நேற்று (ஆக. 27) வந்தார். அப்போது அவருக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க மாலை, மணிமகுடத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சி மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர் ஜி.கே.செல்வகுமார், பாஜக கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.