சென்னை:மாநகராட்சியில் வார்டு கவுன்சிலருக்குப் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக நேற்று முந்தினம் (பிப்ரவரி 16) ருமெனியா நாட்டைச் சேர்ந்த நிகொய்டா ஸ்டெஃபன் மரியஸ் பேருந்தில் ஏறி பரப்புரையில் ஈடுபட்டார். இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியது.
குறிப்பாக நிகொய்டா தொழில் நிமித்தமாக கோயம்புத்தூர் வந்து, திமுக கட்சியின் மீது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கூறி பேருந்து நிலையம், மக்கள் கூடும் இடம் உள்ளிட்ட இடங்களில் துண்டுப் பிரசுரம் விநியோகித்துப் பரப்புரையில் ஈடுபட்டார்.
மேலும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் வியாபார நுழைவு இசைவில் (பிஸ்னஸ் விசா) வந்து அரசியல் கட்சிக்குப் பரப்புரை செய்வது விசா விதிமுறை மீறல் எனவும் இது தொடர்பாக உடனடியாக சென்னையிலுள்ள குடியுரிமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என குடியுரிமை துறை அலுவலர்கள் கோவையிலுள்ள நிகொய்டாவிற்கு நேற்று (பிப்ரவரி 17) நோட்டீஸ் அனுப்பினர்.