தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வால்பாறை முன்னாள் நகராட்சி ஆணையர் மீது வழக்குப்பதிவு - Valparai former municipal commissioner pounraj

வால்பாறை முன்னாள் நகராட்சி ஆணையர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Bribery
Bribery

By

Published : Sep 6, 2021, 6:28 AM IST

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி ஆணையளராக இருந்த பவுன்ராஜ் தனது பதவியை தவறாக பயன்படுத்தி நகராட்சி பணத்தை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய திருப்பூர் மண்டல நகராட்சி நிர்வாக துறை அலுவலர்கள் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பவுன்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மோசடி தொடர்பாக பவுன்ராஜ் மீது கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். (ரூ.15 கோடி மோசடி, ரூ.35 லட்சம் மோசடி) ரூ.15 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கை கோவை மாவட்ட குற்றப்பிரிவில் இருந்து கோவை லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றி டிஜிபி அலுவலகம் சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், கோவை லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர் வால்பாறை நகராட்சியின் முன்னாள் ஆணையர் பவுன்ராஜ் மீது புதியதாக மோசடி உட்பட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நகராட்சி ஆணையருக்கு இருக்கும் அதிகாரத்தை தாண்டியும் அதனை பயன்படுத்தியும், முறைகேடாக ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமாக இருந்த உள்ளாட்சி துறை அதிகாரிகளில் பவுன்ராஜ் முக்கியமானவர் என கருதப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details