தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் கீழ் வரும் பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயில், கரோனா காலக்கட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
நீண்ட நாள்களுக்கு பின் தொடங்கிய கார்கோ பார்சல் ரயில் சேவை! - Cargo parcel train service started after a long time
கோவை: கரோனா காலக்கட்டத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பார்சல் கார்கோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
கோவை
இந்த ரயிலானது (கோவை-ராஜ்கோட்) நாட்டின் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகிறது. தற்போது நீண்ட நாள்களுக்கு பின் மீண்டும் ரயில் சேவையை தொடங்க முடிவு செய்துள்ளனர்
அதன்படி, வடகோவை ரயில் நிலையத்தில் சேலம் கோட்ட மேனேஜர் ஸ்ரீனிவாஸ் பூஜை செய்து கொடியசைத்து ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த ரயில் மூலம் பொருள்களை நாட்டின் நீண்ட தொலைவிற்கு எடுத்து செல்ல முடியும் என்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.