கோவை: மேட்டுப்பாளையம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ஹரீஷ். இவரின் தந்தை வேல்முருகன் பேருந்தில் நடந்துனராக பணிபுரிந்து வருகிறார். ஹரீஷ் இந்து இளைஞர் முன்னணியின் மேட்டுப்பாளையம் நகரத்தலைவராக இருந்து வருகிறார்.
இந்து இளைஞர் முன்னணி நகரத் தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு - கோவை
இந்து இளைஞர் முன்னணியின் நகரத்தலைவரின் கார் கண்ணாடியை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
நேற்றிரவு அவரது வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் கல் வீசி உடைத்துள்ளனர். இதனையடுத்து காலையில் காரை பார்த்த ஹரீஷ், இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் காவல் துறையினர், கார் கண்ணாடி உடைந்த பகுதிகளை பார்வையிட்டு, அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாஜகவினர் வாகனத்தில் தீ வைத்த சம்பவத்தில் 3 பேர் கைது